மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்

மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்
மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்

வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன.

வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்புத் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில், பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன.

மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இத்தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்குகளில் இவ்வகையான அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.