சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கீடு!            சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுசூழல் சீரமைப்பு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னையில் கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,371 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.         தமிழக சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சுழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வரையிலான காலகட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 371 கோடியில் செயல்படுத்தப்படும்’’ என்று அறிவித்தார்.