சபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி வருமானம்

சபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி வருமானம்
சபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி வருமானம்

சபரிமலை: முதல் நாளிலே அதிக வருமானம்... மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளன்றே அதிக வருமானம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கேரள அரசு அறிவித்தது.

மண்டல பூஜையையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் பக்தர்கள் மூலமாக 3 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானமாகக் கிடைத்துள்ளது.

இது, கடந்த ஆண்டை விட ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய் அதிகம். இதனால், வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.