டெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை

டெல்லியில் தக்காளி விலை உயர்வு- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை

புதுடெல்லி:இந்திய சமையலறைகளில் முக்கிய இடம் பிடிக்கும் காய்கறிகளில் தக்காளியும் ஒன்று. கர்நாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து தக்காளி ஏற்றுமதி குறைந்தது. இப்படி தக்காளி வரத்து குறைந்ததால் டெல்லியில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. அதுவும் தக்காளியின் தரம் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை பொறுத்து ரூ.80 வரை கொடுக்க வேண்டி இருப்பதாக டெல்லிவாசிகள் குமுறுகின்றனர்.