வரும் ஞாயிறு அன்று கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்வில் பயங்கர காமெடியை கண்டு ரசியுங்கள்

வரும் ஞாயிறு அன்று கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்வில் பயங்கர காமெடியை கண்டு ரசியுங்கள்
வரும் ஞாயிறு அன்று கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்வில் பயங்கர காமெடியை கண்டு ரசியுங்கள்
வரும் ஞாயிறு அன்று கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்வில் பயங்கர காமெடியை கண்டு ரசியுங்கள்

வரும் ஞாயிறு அன்று கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்வில் பயங்கர காமெடியை கண்டு ரசியுங்கள்
~2021 ஆகஸ்ட் 29 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ராஜா ஜல்சாவையும், சிறப்பு விருந்தினரான நடிகை நமீதாவையும் சந்திக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்யுங்கள் ~
 
சென்னை, 26 ஆகஸ்ட் 2021: இந்த வார இறுதி நாட்களில் ஊடுருவல் படை தீவை தாக்கி கைப்பற்றுகின்ற நிலையில், கலர்ஸ் தமிழின் பிரபல நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0, காமெடி கலாட்டாவும், அச்சத்தை ஏற்படுத்தும் அடாவடிகளும், கதிகலங்க வைக்கப்போகின்றன.  ஊடுருவல் செய்யும் எதிராளிகளிடமிருந்து தனது தீவு மக்களைப் பாதுகாக்க ராஜா ஜல்சா முயற்சி செய்யும்போது நிகழும் இந்த நகைச்சுவை படையெடுப்புத் தாக்குதலை கண்டு ரசிக்க 2021 ஆகஸ்ட் 29 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு தவறாமல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். ராஜா ஜல்சாவாக பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரும், ராஜமாதாவாக நடிகை ஷகீலாவும், பேபி மாதாவாக ஜாங்கிரி மதுமிதுதாவும், கலக்கும் இந்நிகழ்ச்சியின் இவ்வார எபிசோடில் எண்ணற்றோரின் மனம் கவர்ந்த நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக இடம்பெறுகிறார்.  
 
நான்கு பிரிவுகளைக் கொண்ட கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 – ன் இவ்வார எபிசோடின் சிறப்பு பார்ட்னராக கேட்பரி 5 ஸ்டார் களமிறங்குகிறது.  நகைச்சுவையான கடத்தல்கள், கேளிக்கை நிறைந்த நடவடிக்கைகள், சிறப்பான நடிப்பு மற்றும் இன்னும் பல மனம் கவரும் அம்சங்கள் மூலம் இந்த வார எபிசோடு, தனிச்சிறப்பானதாக இருக்கப்போவது நிச்சயம்.  ராஜா ஜல்சாவிற்கும், சிறப்பு விருந்தினரான நடிகை நமீதாவிற்கும் இடையில் நடைபெறும் கிளர்ச்சியூட்டும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உரையாடல்களும் மற்றும் ஜல்சாவின் டிவியில் குதூகலமூட்டும் ஒரு ஸ்பூஃப் உடன் இணைந்து பார்வையாளர்களை நிச்சயம் நகைச்சுவைக் கடலில் மூழ்கடிக்கும்.  
 
இது குறித்து நடிகை நமீதா பேசுகையில், “இந்நிகழ்ச்சி, ஒரு புதுமையான கருத்தாக்கத்துடன் குடும்பமே பார்த்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு ஷோவாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கின்ற விசித்திரமான ஒரு நிகழ்ச்சியான கன்னித் தீவு உல்லாச உலகம் 2.0 – க்காக, சின்னத்திரையில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அற்புத அனுபவமாகும்.  இதன் குழுவினரது உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் பிரமிக்க வைக்கின்றன.  காமெடி தளத்தின் நடிகர்களோடு சேர்ந்து பணிபுரிய நான் நீண்டகாலமாக விருப்பமும், நம்பிக்கையும் கொண்டிருந்தேன்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு சிறந்த நிகழ்ச்சியுடன் மற்றும் கலர்ஸ் தமிழ் போன்ற சிறப்பான சேனலுடன் இணைந்து பணியாற்றியிருப்பதை விட வேறு என்ன சிறப்பானதை நான் பெற்றுவிட முடியும்,” என்று கூறினார்.
 
கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்பது, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  வருகிற மிக சமீபத்திய காமெடி நிகழ்ச்சியில் ராஜா ஜல்சானந்தா மற்றும் அவர் வசிப்பிடமான கன்னித்தீவில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பொங்க இது சித்தரிக்கிறது.  ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிற இந்நிகழ்ச்சியானது, நான்கு பிரிவுகளாக இடம்பெறுகின்றன.  ஒவ்வொன்றும் மற்றதைவிட அதிக கேளிக்கை நிறைந்ததாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.  பிரபல காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கருடன் பிரபல சின்னத்திரை கலைஞரும், நடிகையுமான மதுமிதா, பேபி மாத என்ற கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.  புகழ்பெற்ற நடிகை ஷகிலா ராஜமாதாவாக இதில் இணைந்திருப்பது இந்நிகழ்ச்சியின் தரத்தை இன்னும் உயர்த்துகிறது.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காராவாக நடிகை அன்ன பாரதியும், மாதா ஜால்ராவாக நர்மதாவும், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாக அடாவடி அன்சரும் மற்றும் கலையரசனாக நடிகர் அமுதவாணனும் இணைந்திருக்கின்றனர்.  பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு கலையரசனின் குழுவினராக பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் செய்யும் சேட்டைகளும், நடிப்பும் சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.
 
கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற அற்புதமான நகைச்சுவை நிகழ்ச்சியைக் காண 2021 ஆகஸ்ட் 29, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மறவாமல் டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.