ஆண்டுக்கு 5 முதல் 7.5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ஆண்டுக்கு 5 முதல் 7.5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு
ஆண்டுக்கு 5 முதல் 7.5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி குறைப்பு: பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20-ல் இருந்து 10% ஆக குறைக்கப்படுவதாக 2020-2021 பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.

அதன்படி. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20%ல் இருந்து 15%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி 30%ல் இருந்து 20%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருந்தால் வருமான வரி விகிதம் 30%ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி என்பதில் மாற்றம் இல்லை