பி.வி.சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி

பி.வி.சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி

உலக டூர் பைனல் பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து ஆறுதல் வெற்றியுடன் வெளியேறினார்.

சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சிந்து தனது முதல் இரு ஆட்டங்களில் ஜப்பானின் அகானே யமகுச்சி, சீனாவின் சென் யுஃபி ஆகியோரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் நேற்று சீனாவின் பிங்ஜியோவோவை 21-19, 21-19 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

ஏற்கெனவே இரு ஆட்டங்களில் தோல்வியடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ஆறுதல் வெற்றியுடன் தொடரில் வெளியேறினார் சிந்து.