100 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கோபிநாதன் நாயர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

100 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கோபிநாதன் நாயர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்
100 வயதான சுதந்திரப் போராட்ட வீரர் கோபிநாதன் நாயர் மறைவு- பிரதமர் மோடி இரங்கல்

காந்தியக் கொள்கைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கோபிநாதன் நாயர் நினைவுகூறப்படுவார். 
அவரது மறைவால் வேதனை அடைந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பி கோபிநாதன் நாயர் (100) கேரளாவில் உள்ள நெய்யாட்டின்கராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான அவரது பங்களிப்புக்காவும், காந்தியக் கொள்கைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் கோபிநாதன் நாயர் நினைவுகூறப்படுவார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ரசிகர்களுடனும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.