சமூக விரோதிகளுடன் தொடர்பு, காவலர்கள் பணி நீக்கம்

சமூக விரோதிகளுடன் தொடர்பு, காவலர்கள் பணி நீக்கம்
2 police man terminated in puducherry

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறை ஆயுதக்கிடங்கில் பல தினங்களுக்கு முன்பு துப்பாக்கிகள், தோட்டாக்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது, இதையடுத்து சில தினக்களுக்கு முன் தஞ்சாவூரில் சமூக விரோதிகள் சிலரிடம் தோட்டாக்கள் சிக்கின.

பிடிபட்ட சமூக விரோதிகளிடம் தமிழக போலிசார் நடத்திய விசாரணையில் தோட்டாக்கள் அனைத்தும், புதுச்சேரி ஆயுதக் கிடங்கை சேர்ந்தவை என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து புதுச்சேரி போலிஸ் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் தோட்டாக்களை ஆயுதக்கிடங்கு காவலர் செந்தாமரைக்கண்ணன் என்பவர் முறைகேடாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், காவலர் செந்தாமரைக்கண்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2 police man terminated in puducherry