Chennaipatrika  »  News  »  Tamil News

ஜல்லிக்கட்டு: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

January 12,2017  

Supreme Court refuses to allow Jallikattu

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள மக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த உச்ச நீதிமன்றம், "பொங்கல் பண்டிகைக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பான வரைவு தீர்ப்பு தயாராக இருந்தாலும் வரும் சனிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லை" எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு அணைத்து மக்களிடையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.