Chennaipatrika  »  News  »  Tamil News

‘அழைக்கலாம் சமைக்கலாம்’

November 09,2017  

Azhakkalam Samaikkalam Tv Program

தமிழ் தொலைக்காட்சியில் ஒருவித புது முயற்சி திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணியில் இருந்து 1:00 மணி வரைக்கும் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ‘அழைக்கலாம் சமைக்கலாம்’ என்னும் புதிய நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

வீட்டில் இருக்க கூடிய இல்லதரசிகளுக்கு சமையல் சார்ந்த எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் தொலைப்பேசியின் மூலம் தீர்வு சொல்லும் ஒரு நிகழ்ச்சி… அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் இடையில் கூடுக்க கூடிய சின்ன சின்ன சமையல் சார்ந்த குறிப்புகளும் நிகழ்ச்சியை சுவராஸ்யப்படுத்தும் வகையில் அமையும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்கள் செஃப் ஆர்.கே.பிரகாஷ், ராம் பிரகாஷ் மற்றும் கிருத்திகா.