Chennaipatrika  »  News  »  Tamil News

“பீனிக்ஸ் மனிதர்கள்”

April 13,2018  

News7 tamil program Phoenix manithagal

சாதனைப் பெண்கள் மட்டும் அல்லாமல் இப்போது பல்வேறு துறைகளில் சாதிக்கும் மனிதர்களையும் கௌரப்படுத்தும் விதமாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனெனில் குடும்பம், சமூகம் என பல காரணிகள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது அதையும் மீறி வெற்றியை நோக்கிய பயணம்தான் ”ஃபினிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சி”..

இந்த வார நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருநங்கைகளுக்கான 'Born to Win' அமைப்பின் நிறுவனர் ஸ்வேதா அவர்களுடன் நேர் உரையாடல். ஆண், பெண் மட்டும் சாதிக்க பிறந்தவர்கள் அல்ல .திருநங்கைகளும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை உணர்த்தி வழிகாட்டியாக இருக்கும் இந்த அமைப்பு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற நிறைய சலுகைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களைப் போலவே சுவாரசியமான பலரை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்குபவர் பனிமலர்.