Chennaipatrika  »  News  »  Tamil News

தந்தையை தாக்கி சிறுமி பாலியல் பலாத்காரம்

April 19,2018  

14 year old child gandraped and father was axed in Hamirpur

சிம்லா: இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்று வீடு திரும்பிய 14 வயது பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸ் துணை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறுகையில், 'ஹமிர்புரில் உள்ள பிவார் பகுதியில் வயலுக்கு சென்ற பெண் தன் தந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தன் மகளை காப்பாற்ற முயன்ற தந்தையையும் அக்கும்பல் கோடாரியால் பயங்கரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆனந்த்குமார், சஞ்சய் மற்றும் சந்த்பாபு ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளது, மருத்துவ பரிசோதனை அறிக்கையை பெற்ற பின்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.