Chennaipatrika  »  News  »  Tamil News

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

June 09,2018  

PM Narendra Modi Security Increased
பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது....

புதுடெல்லி: பிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கைதான மாவோயிஸ்டிடம் இருந்து கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படை வீர்கள் (எஸ்.பி.ஜி.) மற்றும் நெருக்கமான பாதுகாப்பு படை வீரர்கள் (சி.பி.ஜி.) ஆகியோர் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

பிரதமரின் பாதுகாப்பு படையில் அதிவிரைவில் குறி பார்த்து சுடும் வீரர்கள் மற்றும் நொடியில் எதிரியை சுட்டு வீழ்த்தும் திறமையான வீரர்களும் தற்போது இடம் பிடித்துள்ளனர்.