Chennaipatrika  »  News  »  Tamil News

தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்

July 10,2018  

Grace Mark for Tamil Language students in NEET Exam
சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள்....................

மதுரை: சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தமிழில் வழங்கப்பட்ட வினத்தாளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி ரங்கராஜன் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வு சரியான முறையில் நடந்துள்ளதாக பதில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.