Chennaipatrika  »  News  »  Tamil News

120 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மந்திரவாதி!

July 21,2018  

Haryana temple Mahant arested for raping 120 innocent womens
அரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு.............

சண்டிகர்: அரியானா மாநிலம் பெடஹாபாத் மாவட்டத்தில் உள்ளது டோஹானா. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லு, குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தன்னுடைய மந்திர தந்திரத்தால் தீர்த்து வைக்கப்படும் என்று கூறிவந்த அந்த மந்திரவாதி, பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் தேடி பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை, தானே செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டு சுமார் 120 அப்பாவி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பிறகு திடீரென்று பாதிக்கப்பட்ட பெண்களில் யார் ஞாபகத்துக்கு வருகிறாரோ, அவருக்கு போன் செய்வார். ‘என்னை வந்து சந்திக்க வேண்டும், இல்லையென்றால் உனது வீடியோ என்னிடம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று மிரட்டுவார். வேறு வழியே இல்லாமல் அந்தப் பெண்ணும் செல்வார். மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்வார். இதை ஒரு தொழிலாகவே செய்து வந்துள்ளார் இந்த மந்திரவாதி.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன், இவர் மீது ஒரு பெண் போலீசில் புகார் கொடுத்தார். அதில், ‘என் கணவருக்கு தெரிந்தவர் அமர்புரி. அடிக்கடி அவரை சந்தித்ததால் பழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரது கோயிலுக்கு வருமாறு அழைத்தார். சென்றேன். கோயிலில் வைத்தே என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் ஜாமினில் அவர் வெளியே வந்தார்.

இந்நிலையில் அவர் மீது இப்போது சில பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் 120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து எடுத்து வைத்திருந்த வீடியோ கிளிப்பிங்குகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பெடஹாபாத் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிம்லா தேவி கூறும்போது, ‘மந்திரவாதியிடம் இருந்து 120-க்கும் அதிகமான வீடியோ கிளிப்பிங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரிடம் மேலும் விசாரணை நடந்துவருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடம் பேசிவருகிறோம்’ என்றார்.