Chennaipatrika  »  News  »  Tamil News

அப்போலோ மருத்துவமனையின் 10-வது சர்வதேச மாநாடு

August 04,2018  

10th International Clinical Nutrition Update in Chennai
ஆகஸ்ட் 4, 2018: அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஊட்டச்சத்து தொடர்பான 10-வது சர்வதேச மாநாடு சென்னையில் நடத்துகிறது.........................

சென்னை: ஆகஸ்ட் 4, 2018: அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஊட்டச்சத்து தொடர்பான 10-வது சர்வதேச மாநாடு சென்னையில் நடத்துகிறது, ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான அப்போலோ மருத்துவமனை, சர்வதேச மருத்துவ ஊட்டச்சத்து மேம்படுத்தல் (International Clinical Nutrition Update) தொடர்பான 10-வது மாநாட்டை சென்னையில் நடத்துகிறது. இந்த வருடாந்திர மாநாட்டுக்கு அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை ஏற்பாடு செய்துள்ளது. இத்துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் அறிவுப் பரிமாற்றம் செய்துகொள்வதற்காக இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஊட்டச்சத்து துறையில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் மேம்பாடுகள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த 2 நாள் சர்வதேச மாநாட்டை தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் (Dr.J. Radhakrishnan, I.A.S. The Principal Secretary, Health and Family Welfare Department, Govt. of TN) இந்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

‘மருத்துவ ஊட்டச்சத்து பழக்கத்தை அதிகரிப்பது’ (Enhancing Clinical Nutrition Practice) என்பது இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இம்மாநாட்டில் 700 நாடுகளைச் சேர்ந்த 12 பிரதிநிதிகள் பங்கேற்று இத்துறையில் உள்ள தங்கள் அனுபவங்களையும், சிறந்த மருத்துவ முறைகளையும் மற்றவர்களுக்கு பகிர உள்ளனர். இந்த மாநாட்டில் நிகழ்த்தப்படவுள்ள உரைகள் மற்றும் விவாதங்கள் மூலம் உணவு கட்டுப்பாட்டு துறையில் பல்வேறு மாற்றங்களையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள முடியும்.

மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பராமரிப்பது, மருத்துவமனை சார்ந்த ஊட்டச்சத்து தலையீடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இதன் அறிவியல் அமர்வுகளில் மருத்துவர்கள் மற்றும் டயட்டீஷியன்கள், பல்வேறு மருத்துவ நிலைமைகளின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை எதிர்கொள்வது பற்றி விவாதிக்க உள்ளனர். இத்துறையில் தற்போதைய அறிவியல் போக்குகள் பற்றிய விவாதங்கள் இதில் சிறப்பம்சமாக இருக்கும். மேலும் ஊட்டச்சத்து பராமரிப்பு செயல்முறை, ஊட்டச்சத்து சார்ந்த உடல் பரிசோதனை (NFPE), ஊட்டசத்து மதிப்பீடு - ஊட்டசத்தின்மையை கண்டறிதல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படும்.

ஏஐசிஎன்யு ஒருங்கிணைப்புக் குழு தலைவரான டாக்டர். புவனேஸ்வரி சங்கர் (Dr. Bhuvaneshwari Shankar, Organizing Chair Person) இதுபற்றி கூறும்போது “வேகமாக சென்றுகொண்டிருக்கும் இன்றைய உலகில், உணவுக் கட்டுப்பாடு என்பது உணவுத் திட்டமிடல், நிர்வாகம் மற்றும் ஊட்டச்சத்து மீளுருவாக்கம் ஆகியவற்றை மட்டும் குறிப்பிடுவதல்ல. அதற்கும் மேலானது. மருத்துவமனையில் தங்கும் நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதிலும், உடல்நலத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைப்பதிலும் இது முக்கிய பங்கற்றுகிறது” என்றார். மேலும் அவர் கூறும்போது, “அப்போலோ மருத்துவமனையைப் பொறுத்தவரை கனிவான கவனிப்பு மற்றும் சிறந்த மருத்துவம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். இங்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு குழுவினர் நோயாளிகளின் ஊட்டச்சத்து மற்றும் மேம்பாட்டில் முக்கிய கவனம் எடுத்துக்கொள்கின்றனர். டயட்டீஷியன்கள் அனைவரும் இத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றியும் போகுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்” என்றார்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பேசவுள்ளனர். 12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 675 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு ஊட்டச்சத்து துறையைப் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொள்ள உள்ளனர்.