Chennaipatrika  »  News  »  Tamil News

11 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை செய்த எம்.பி மகன்

August 04,2018  

TRS MPs son booked for sexually assaulting 11 Students
11 மாணவிகளுக்கு பாலியல் கொடுமை செய்த எம்.பி மகன்.........

நிஸாமாபாத்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி சீனிவாசின் மகன் சஞ்சய் நடத்தி வரும் சாங்கரி நர்சிங் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகளை பாலியல் கொடுமை செய்ததாக புகார் அளித்து உள்ளதாக தெற்கு நிஸாமாபாத் உதவி போலீஸ் உதவி ஆணையாளர் தெரிவித்து உள்ளார். "நாங்கள் வழக்கு விசாரணை செய்கிறோம். விசாரணை முடிந்தவுடன் மேலதிக விவரங்கள் தெரிய வரும் என் கூறி உள்ளார்.

சஞ்சய் இந்த மாணவிகளை பலமுறை செக்ஸ் டார்ச்சர் செய்து உள்ளார். இது தொடர்பாக சஞ்சய் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) 354, 506, 509 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.