Chennaipatrika  »  News  »  Tamil News

பட்டாசு ஆலை வெடி விபத்து - 3 பேர் பலி

September 08,2018  

3 killed in Kakaviadanpatti fireworks blast near Sivakasi

விருதுநகர்: வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தி படு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று காலை உராய்வு காரணமாக திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.