தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் துவக்கவிழா!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் துவக்கவிழா!
25th National Children Science Congress 2017 held at Sathyabama Univeristy

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் துவக்கவிழா! சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் துவக்கவிழா நிகழ்ச்சி சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில், தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களிலிருந்து 10 முதல் 17 வயது வரையிலான சுமார் 1500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாநில அளவில் தேர்ந்தேடுக்கப்பட்ட 1500 மாணவர்களின், 281 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்படும் ஐந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய விவசாய அமைச்சக இயக்குனர் விஜயன், அப்பல்கலைகழகத்தின் துணைத்ததைலவர் மேரி ஜான்சன், இணை வேந்தர் மரியஜீனா ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைப்பெற்ற அறிவியல் விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் சீனீவாசன் மற்றும் சத்யபாமா நிகர்நிலை பல்கலையின் ஆராய்ச்சி இயக்குனர் ஷீலா ராணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை சார்பாக வருகின்ற 26 ஆம் தேதி குஜராத்தில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தபட உள்ளது.

மேலும்,நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 281 அறிவியல் படைப்புகளும் துறை சார்ந்த விஞ்ஞானிகளால் சோதனை செய்யப்பட்டது. இதில் ஐந்து படைப்புகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அகில இந்திய ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக, தொலைநோக்கியை கொண்டு விண்வெளியை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வற்காக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

25th National Children Science Congress 2017 held at Sathyabama Univeristy

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/Sathyabama-11-12-17]