3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

சென்னை: 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசலால் சென்னை கோயம்பேடு சிக்கி தவித்தது.

சென்னை கோயம்பேட்டில் பொதுவாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதாவது சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். 


இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம், தனியார் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்திருக்கும். இதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமாகவே பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த நிலையில் இந்த வாரம் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறையாகவும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் கோயம்பேடு சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.