3-வது அப்பல்லோ சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் - 2019

3-வது அப்பல்லோ சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் - 2019

சென்னை சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிறுவனம் [The Institute of Colorectal Surgery], அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட் கிளினிக் [Cleveland clinic, USA] மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் [University College London, UK] ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து, "3-வது அப்பல்லோ சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் - 2019" [3rd  Apollo International Colorectal Symposium 2019] என்ற பெயரில் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி 2019 வரை நடைபெறுகிறது. பெருங்குடல் புற்றுநோய் தொடர்பாகவும், பரிசோதனைகள் பற்றியும், பெருங்குடல் புற்று நோய்க்கான சிகிச்சைமுறைகள் தொடர்பாகவும், உலகின் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த சிறந்த மருத்துவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு மாபெரும் தளமாக இந்த கருத்தரங்கம் அமையும்.

இன்று உலகில் அதிகரித்து வரும் புற்று நோய்களில் 3-வது பெரிய புற்றுநோயாக பெருங்குடல் புற்றுநோய், உள்ளது. இதன் பாதிப்பால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறக்குறைய 6 லட்சத்து 94 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இந்நோயால் புதிதாக பாதிப்படைந்திருக்கும் 1.4 மில்லியன் மக்களில் 3-ல் ஒரு பங்கினருக்கு மலக்குடலுக்கு அருகில் பெருங்குடல் புற்று நோயின் [colorectal cancers] பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த கருத்தரங்கில், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் பற்றி கலந்துரையாடுவதுடன், இதை தடுக்கும் பகுப்பாய்வுகள், சிகிச்சை முறைகள், சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் கவனிப்பு வழிகள், வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்உள்ளிட்ட வைகளையும் பற்றி விவாதிக்கப்படும். மேலும்பெருங்குடல் புற்றுநோய் இருக்கிறதா இல்லையா, அதன் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் அவற்றுக்கு சரியான சிகிச்சைகளில் நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்படும்.

மலக்குடல் புற்றுநோய், அதன் பாதிப்பினால் உடல் அமைப்பில் சிகிச்சைகளுக்கு உள்ள வாய்ப்புகள், பெருங்குடல் அறுவைச்சிகிச்சை மற்றும் சிகிச்சைகளுக்கான வளர்ச்சிக் கண்டு புதிய தொழில்நுட்பங்கள், [Emerging and new technologies available for colorectal surgery and treatment], மலக்குடல் புற்று நோய்க்கான ரோபோட்டிக் சிகிச்சை, கீமோதெரபி, பெருங்குடல் தொடர்பான நோய்களின் வகைப்பற்றிய உலகளாவிய சூழ்நிலை,  பெருங்குடல் புற்றுநோய்க்கு பன்னோக்கு மருத்துவம் அடிப்படையிலான மேலாண்மை [Multidisciplinary management of Colorectal Diseases], காலரெக்டல்லிவர் மெடாஸ்டாசிஸ் மேனேஜ் மெண்ட்[Colorectal Liver Metastasis Management], சைடொரெடக்‌ஷன் சர்ஜரி [Cytoreduction Surgery] உள்ளிட்டவை இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் கலந்துரையாடப்படும் முக்கிய தலைப்புகளாகும்.

இக்கருத்தரங்கின் ஊடக சந்திப்பில் பேசிய அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் க்ரூப்பின் துணைத்தலைவர் திருமதி. ப்ரீத்தாரெட்டி [Ms. Preetha Reddy, Vice Chairperson, Apollo Hospitals Group], ‘’இந்தியாவில்இந்த கொடுமையான நோய் அதிகரித்து வருதற்கு முக்கிய காரணம், சுறுசுறுப்பாக இயங்காமல் ஒரே இடத்தில் இருந்து பணிப்புரியும் வாழ்க்கை முறை அதிகமாகிவருவது தான். மேலும் இளம் வயதிலேயே இந்நோயின் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட பெரும்பாலான மக்களுக்கும், அவர்களது உணவு பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் உருவாக்க வேண்டியது மிக மிக அவசியம். மேலும் இந்நோயை மரபணு ரீதியில் அதன் இயல்பை அறிந்து கொள்ளும் அதிக வாய்ப்புள்ளது. இதனால் இந்நோயை வெகு ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டறிந்தால் வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியும்.’’ என்றார்.

அப்பல்லோ மருத்துவமனையின் பெருங்குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் முனி கிருஷ்ணன் [Dr. Venkatesh Munikrishnan, Colorectal &  Gastrointestinal Surgeon, Apollo Hospitals] "ஒவ்வொரு ஆண்டும் பெருங்குடல் நோய் மேலாண்மைக்காக 450-க்கும் அதிகமான மருத்துவ நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. பெருங்குடல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால், அதை முற்றிலும் குணமாக்க முடியும். வளர்ந்த தொழில்நுட்பம் மற்றும் அறுவைசிகிச்சை முறைகள் மூலம் இந்த நோய்க்கான சிகிச்சை தற்போது மிக எளிதாகி யுள்ளது. தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் கடைப்பிடிக்கப்படும் குறைந்த ஊடுருவல் அறுவை சிகிச்சை முறைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைத்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். அப்பல்லோ பெருங்குடல் அறுவை சிகிச்சைமையம், நோய் தடுப்பு முறைகளிலும், நோயை கண்டறியும் வழி முறைகளிலும் அதிககவனம் செலுத்திவருகிறது. அதிக ஊட்டமளிக்கும், அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும் முறைக்கு மாறுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது இந்நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கும்.இக்கருத்தரங்கம் பெருங்குடல் புற்று நோய்க்கான, மரபணு அடிப்படையிலான, நோய் எதிர்ப்பு ரீதியிலான குறைப்பாடுகளுக்கு சிகிச்சையளிப்பதில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களைக் குறித்து விவாதிக்கும்..இதற்கான ஒரு சர்வதேச தளத்தை இக்கருத்தரங்கம் அளிக்கும்" என்று கூறினார்.

சர்வதேச பெருங்குடல் கருத்தரங்கம் மார்ச் 22 முதல் 25 -ம் தேதி 2019 வரை நடைபெறகிறது. இதில் உலகெங்கிலும் இருந்து 450-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பிற உடல் நலப்பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்கள் இந்நோய் தொடர்பான அறுவைச்சிகிச்சை முறைகள் மற்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து தங்களது புதுமையான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளனர். சர்வதேச அளவில் பெருங்குடல் புற்று நோய் சிகிச்சையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களான இங்கிலாந்தைச் சேர்ந்தே பேராசிரியர் ஸ்டீவ்வெக்ஸ்னர் [Prof. Steven Wexner Chairman of Colorectal Surgery, Director- Digestive Disease Center, University College, UK], ஸ்பெயினைச் சேர்ந்த பேராசிரியர். அந்தனியோ எம்லேசி [Prof. Antonio M Lacy Spain, Chief of the Gastrointestinal Surgery Department Hospital Clinic Barcelona, Spain President of AIS Channel] மற்றும் பெருங்குடல் நோய்களுக்கான பன்னோக்கு மருத்துவ நடைமுறை மேலாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் டாக்டர் மனீஷ்சந்த் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்கின்றனர்.