நியூசிலாந்து மசூதி தாக்குதல் - 49 பேர் பலி

நியூசிலாந்து மசூதி தாக்குதல் - 49 பேர் பலி

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, மசூதிக்குள் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். இதே போல் அறுகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான், இந்த இரு தாக்குதலில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், சுமார் 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.