டி.டி.வி தினகரனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

டி.டி.வி தினகரனுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
5 days police custody to TTV DInakaran

புது டெல்லி: "இரட்டை இலை" சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுகவின் துணை செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனாவை நேற்றிரவு டெல்லி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா இன்று பிற்பகலில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே டிடிவி தினகரன் எந்தவித இடையூறும் இல்லாமல் நேரடியாக விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து, டிடிவி தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

5 days police custody to TTV DInakaran