மினி பஸ் மீது லாரி மோதல்: 7 பேர் பலி

மினி பஸ் மீது லாரி மோதல்: 7 பேர் பலி

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் காத்ரி நகரை நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு மினி பஸ் வந்துகொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் தனகல்லு என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியுடன் மினி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து ஏற்பட்டதும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.