காய்ச்சல் இருந்தா அலர்ட் செய்யும் அம்சம்... ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சில் விரைவில் வருகிறது

காய்ச்சல் இருந்தா அலர்ட் செய்யும் அம்சம்... ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சில் விரைவில் வருகிறது
காய்ச்சல் இருந்தா அலர்ட் செய்யும் அம்சம்... ஆப்பிள் ஸ்மார்ட்வாட்சில் விரைவில் வருகிறது

இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.


காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் வாட்ச் 8 சீரிஸ் ஸ்மார்ட்வாட்சை அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச், 3 விதமான வேரியண்ட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் டெம்பரேச்சர் சென்சாரும் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் மூலம் உடல் வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமின்றி ஒருவேளை பயனர்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருந்து அவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மருத்துவரை அணுகச் சொல்லி அலர்ட் செய்யும் அம்சமும் இந்த ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற்று உள்ளது.


இதில் எஸ் 8 சிப் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் வெளியீட்டு தேதி குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. டெம்பரேச்சர் சென்சார் தவிர பல்வேறு சிறப்பம்சங்களும் வாட்ச் 8 சீரிஸில் இடம்பெறும் என கூறப்படுகிறது. அவை என்னென்ன என்பது வரும் நாட்களில் தெரியவரும்.