டிடிவி தினகரன் கட்சி கொடிக்கு எதிராக வழக்கு

டிடிவி தினகரன் கட்சி கொடிக்கு எதிராக வழக்கு
ADMK files case against TTV Dinakaran party flag

சென்னை: டிடிவி தினகரன் நேற்று மதுரையில் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார், மேலும் அந்த கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

தினகரனின் புதிய கட்சியின் கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு, மத்தியில் ஜெயலலிதா உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய கொடிக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ள டி.டி.வி.தினகரனின் கட்சி கொடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த மனு சிவில் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

ADMK files case against TTV Dinakaran party flag