திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக புகார் மனு

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக புகார் மனு

சென்னை: தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் காட்பாடியில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வருமானவரித்துறை அதிகாரிகள், துரைமுருகன் வீடு, அவரது மகன் நடத்தும் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் சோதனை நடத்தினார்கள்.

விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் கோடிக்கணக்கான பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

இந்த நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு எதிராக அதிமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.