முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து நடிகர் விஷால் கோரிக்கை

முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து நடிகர் விஷால் கோரிக்கை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சந்தித்து பேசினார்.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஷால் கூறியதாவது:-

இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்ததற்காக முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

வரி விவகாரத்தில் மற்ற மொழிப்படங்களை விட தமிழ்ப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை வைத்துள்ளோம். சட்டவிரோத இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். 

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் சட்டவிரோதமான இணையத்தளங்களை முடக்க முடியும். தமிழக அரசு நினைத்தால் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் 
என நடிகர் விஷால் கூறினார்.