கேரளாவிற்கு அதானி குழுமம், ரிலையன்ஸ் நிதியுதவி

கேரளாவிற்கு அதானி குழுமம், ரிலையன்ஸ் நிதியுதவி
Adani group and Reliance Group provides fund to Kerala Flood

கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அந்த மாநிலத்தில் வரலாறு காணாத அழிவினை சந்தித்து வருகிறது, வெள்ளத்தில் சுமார் 230க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநிலத்தை சேர்த்த மக்கள் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய தனியார் நிறுவனங்கள் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவ முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக கேரள முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அதானி குழுமம், அதே போல் ரிலையன்ஸ் பவுண்டேஷன், கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு ரூ.21 கோடியை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளது. வெள்ளத்தால் மன அழுத்தத்தில் வாடும் கேரள சகோதர, சகோதரிகளுக்கு இந்நேரத்தில் சக குடிமக்களான நாம் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதை ஒரு கடமையாக கருத வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீட்டா அம்பானி தெரிவுத்துள்ளார்.

Adani group and Reliance Group provides fund to Kerala Flood