எஸ்ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் தொலை தூரக்கல்விக்கான சேர்க்கை

எஸ்ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் தொலை தூரக்கல்விக்கான சேர்க்கை

எஸ்ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்  கல்வி நிறுவனத்தின் 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான தொலை தூரக்கல்விக்கான சேர்க்கை யு.ஜி.சி.யின் பரிந்துரைப்படி நடக்க உள்ளது. பி.காம். பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ, பி.ஏ. ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன், ( இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை), எம்.ஏ. ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

யு.ஜி.சி.யின் நாக்(NAAC) கமிட்டியின் தரநிலையில் 3.55 சிஜிபியைப் பெற்றபிறகு எஸ்.ஆர்.எம். நிறுவனம் இந்த தொலைநிலைக்கல்விக்கான படிப்பைத் தொடங்கியுள்ளது. 
தமிழகத்தின் மிகச்சிலப்பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம். நிறுவனத்தி்ற்கு யு.ஜி.சி. தொலைநிலைக்கல்வியை நடத்துவதற்கான தகுதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஐந்து ஆண்டிற்கு இத்தகுதிநிலை தொடரும்.