மருத்துவ துறையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

மருத்துவ துறையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்
Amazon enters into online pharmacy

வாஷிங்டன்: அமேசான்.காம் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டல் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும்.

1994-ம் ஆண்டு ஜெப் பெசோஸ் என்பவரால் அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், பின்னாளில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது மருத்துவ துறையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ‘பில்பேக்’ எனப்படும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமேசான் நிறுவனம் இனி மருந்துகளை ஆன்லைன் மூலம் உலகம் முழுவதும் விற்பனை செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

Amazon enters into online pharmacy