கணவர் இறந்ததை செய்தியாக வாசித்த செய்தி வாசிப்பாளர்

கணவர் இறந்ததை செய்தியாக வாசித்த செய்தி வாசிப்பாளர்
Anchor read live news of her husbands death

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ‘IBC-24’ தொலைக்காட்சியின் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருபவர் சுப்ரீத் கவுர், கடந்த 8-ம் தேதியன்றும் வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர், அன்றைய காலை 10 மணி செய்திகளை நேரடி ஒளிபரப்பாக செய்தி வாசித்து கொண்டிருந்தார்.

அப்போது, மஹாசமுன்ட் மாவட்டம், சராய்பாலி பகுதியில் இருந்து மாநில தலைநகர் ராய்ப்பூர் நோக்கி சென்ற ‘ரெனால்ட்ஸ் டஸ்ட்டர்’ கார், லாரியின் மீது மோதிய விபத்தில் அந்தக் காரில் பயணம் செய்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர் என்ற செய்தியை சற்றும் பதற்றப்படாமல் சுப்ரீத் கவுர் வாசித்து முடித்தார்.

தன் கணவர் தன்னிடம் ஏற்கனவே கூறியிருந்தவாறு விபத்து நடந்த இடத்தின் வழியாக தனது கணவரும் அவரது நண்பர்களும் ‘ரெனால்ட்ஸ் டஸ்ட்டர்’ காரில் சென்றிருப்பார்கள். பலியானவர்களில் ஒருவர் நமது கணவராக இருக்குமோ?.. என்ற ஐயமும், அச்சமும் இருத்த போதிலும் அதை சற்றும் வெளிப்படுத்தாமல் சுப்ரீத் கவுர் செய்தியை வாசித்து முடித்தார்.

ஆனால், நேரடி ஒளிபரப்புக்கான நேரம் முடிந்த பின்னர் கேமராவுக்கு முன்னால் இருந்து எழுந்து வெளியே ஓடிச்சென்று, தன்னுடைய கணவர் இறந்ததை அறிந்து கதறித் துடித்துள்ளார் சுப்ரீத் கவுர், இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOR VIDEOS PLEASE CLICK HERE: https://youtu.be/l2cR0meHodE

Anchor read live news of her husbands death