அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி!

அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி!

சென்னை, 18 ஜூலை 2017 ஆசியாவின் முன்னணி மற்றும் அதிநவீன மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் குரூப்பான அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ், இன்று சென்னையில் முதன் முறையாக, தற்போது மிக அவசியமானதாகவும் இருக்கும் தலைவலி, மைக்ரேன் மற்றும் டிமென்ஷியா ஆகிய  பிரச்னைகளுக்கு தீர்வுகள் அளிக்கும் வகையில் ஒரு மாபெரும் முன் முயற்சியாக ’அபோல்லோ மெமரி அண்ட் அபோல்லோ ஹெட் ஏக் & மைக்ரேன் க்ளினிக்ஸ்’ –ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது.

க்ரீம்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் அபோல்லோ மருத்துவமனைகளில் அமைந்துள்ள இந்த சிறப்பு க்ளினிக்குகள்,போல்லோ மருத்துவமனைக் குழுத்தின் தலைவர், டாக்டர் பிரதாப் சி. ரெட்டி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு க்ளினிக்னிக்குகள், மிகவும் அனுபவம் வாய்ந்த நரம்பியல் அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நரம்பியல் வல்லுநர்களின் தலைமையின் கீழ்  இயங்கும். மேலும் இந்த க்ளினிக்குகள் நீண்டகால தலைவலி, ஒற்றைத் தலைவலி மற்றும் டிமென்ஷியா (நினைவு இழப்பு) மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சைகளை அளிக்கும். அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 11.00 – முதல் மதியம் 1.00 மணி வரை இயங்கும். அபோல்லோ மெமரி கிளினிக் மதியம் 2.00 p.m. - 4.00 p.m. வரை இயங்கும்.

தொடக்க விழாவில்  அபோல்லோ மருத்துவமனைக் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி கூறுகையில், "மைக்ரேன் ஆராய்ச்சி அறக்கட்டளை கூற்றுப்படி, உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் மைக்ரேன் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைவலியால் ஏற்படும் வலியானது நம்மை செயலிழக்கச் செய்வதோடு சில நேரங்களில் முழுமையாக பலவீனமாக்கி விடும். அபோல்லோ மெமரி மற்றும் தலைவலி - மைக்ரேன் க்ளினிக்கின் அறிமுகமானது, அபோல்லோ மருத்துவமனைகளானது, தனது நோயாளிகளுக்கு அவசியமான தீர்வுகளையும் சிகிச்சைகளையும் தனிப்பட்ட தேவைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த முறையில் அளிக்கவேண்டும் என்ற அக்கறையின் வெளிப்பாடே இந்த  ’அபோல்லோ மெமரி மற்றும் ஹெட் ஏக்’ க்ளினிக்குகளின் ஆரம்பம். அதிகரித்து வரும் பல்வேறு வாழ்க்கை முறை மாற்றங்களினால், தலைவலி என்பது அனைவருக்கும் பொதுவானதாக மாறி வருகின்றது. மேலும் இது நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்திறனை பெரிதும் பாதிக்கின்றன. நம்மில் பலர் தலைவலியைக் கண்டுக்கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள் அல்லது தாங்களாகவே தங்களுக்கு சுய மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பழக்கம் இன்று கவலையளிக்கும் ஒன்றாக உருவெடுத்து இருக்கிறது.  இப்பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமானதாகும். அதை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களுக்கு உதவும் வகையிலும் இந்த சிறப்பு க்ளினிக்குகளை அறிமுகப்படுத்தியிருப்பது அடுத்தக்கட்ட முயற்சியாக இருக்குமென்பதை  நாங்கள் நம்புகிறோம். "

 இந்த புதிய ஒரு ஸ்டாப் க்ளினிக்குகளின் அறிமுகம் குறித்து,  அபோல்லோ மருத்துவமனைக் குழுமத்தின் துணைத் தலைவர் திருமதி ப்ரீதா ரெட்டி கூறுகையில், "நிபுணத்துவம் வாய்ந்த இந்த சிறப்பு க்ளினிக்குகள், நோயைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதை மிகவும் எளிதான ஒன்றாக்கி இருக்கின்றன. இப்பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக்கின் ,நரம்பியல் ஆலோசகர், மனநலம் மருத்துவர், ஃபிசியோதெரபிஸ்ட் மற்றும் குடும்பநல மருத்துவர் ஆகியோரால் பரிசோதிக்கப்படும். அதன்பிறகு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் முறையாக மேற்கொள்ளப்படும். நரம்பியல், மனநலம், ஃபிசியோதெரபி மற்றும் குடும்பநலம் என இந்த நான்கு சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் ஒரு முழுமையான பரிசோதனையை அபோல்லோ தலைவலி & மைக்ரேன் க்ளினிக் மேற்கொள்வதால்,  இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு தகுந்த சிகிச்சையளிக்க மிகவும் சிறந்த வழியாகும்" என்றார்.

இதேபோல், அபோல்லோ மெமரி கிளினிக்,  நினைவு குறைப்பாடுகளுக்கு பல்வேறு மருத்துவ நடைமுறைகளின் கீழ், ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் உள்ளிட்ட ஞாபகத்திறன் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகள் காணும் வகையில், அடையாளம் காணுதல்,  அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தேவையான சிகிச்சையளித்தல் என மக்களுக்கு ஆதரவுக்கரம்நீட்டுகிறது.