அசோக் லேலண்ட் குழுவுக்கு "டெமிங் விருது"

அசோக் லேலண்ட் குழுவுக்கு "டெமிங் விருது"

சென்னை, 9 நவம்பர் 2017: இந்துஜா குழுமத்தின்  முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், 2017-ம் ஆண்டிற்கான உலகளவில் பெரும் மதிப்புவாய்ந்த டெமிங் விருதை (Deming Prize), தனது ஓசூர் யூனிட்- 2 உற்பத்தி மையத்தின் செயல்பாடுகளுக்காகப் பெற்றுள்ளது. இந்த டெமிங் விருது என்பது ஒரு உலகளாவிய தரநிலை மதிப்பீட்டிற்கான (Total Quality Management) மிக உயரிய விருது ஆகும். மேலும் இந்த விருது உலகளவில் பரவலாக அங்கீகரிக்கப்படும் மற்றும் மிகவும் பழமையான விருதும் ஆகும். தங்களுடைய வணிக செயல்பாடுகளில், வாடிக்கையாளர்களைச் சார்ந்த வர்த்தக நோக்கங்கள் மற்றும் செயல்பாட்டு யுக்திகளை அடிப்படையாக கொண்டு செயல்படுவதில் ஒட்டுமொத்த தர மேலாண்மை (Total Quality Management -TQM) செயல்படுத்தும் விதமாக நிறுவியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது. 2016-ல் பன்ட்நகர் அசோக் லேலண்ட், உலகின் முதல் டிரக் மற்றும் பேருந்து பிளான்ட் -ஆக திகழ்வதுடன், இந்த டெமிங் விருதை அடுத்தடுத்து தொடர்ந்து  பெறும் சிவி (Commercial Vehicle) தயாரிப்பு நிறுவனங்களில் ஜப்பான் நாட்டைச் சாராமல்,  வெளிநாட்டைச் சேர்ந்த முதல் நிறுவனம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.வினோத் கே.தசாரி (Mr. Vinod K. Dasari, Managing Director, Ashok Leyland), இந்த விருது குறித்துப் பேசுகையில்,   ’’ அசோக் லேலண்ட் ப்ராண்ட், தனது உயர்தரத்திற்கு பெயர்பெற்றது. அசோக் லேலண்ட் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியிலும் மிக உயர்ந்த தரத்தை தொடரவேண்டுமென்று அக்கறை கொள்கிறோம். உலகப்புகழ் பெற்ற ’டெமிங் விருதை’ இம்முறை எங்களது இரண்டாவது யூனிட்டிற்காக வென்றிருக்கிறோம்.  தொடர்ந்து இரண்டாவது வருடமாக இவ்விருதை நாங்கள் வென்றிருப்பது, எங்களது ஒவ்வொரு முயற்சிகள் மற்றும் எங்களது நம்பிக்கை ஆகியவற்றுக்கான சான்றுகளாக அமைந்திருக்கின்றன. ’உங்கள் வெற்றி…எங்களது வெற்றி’ ‘Aapki Jeet, Hamari Jeet’ என்னும் நம்முடைய ப்ராண்ட்டின் கோட்பாட்டிற்கேற்ப நம்முடைய தயாரிப்புகள் ஒவ்வொன்றிலும் உயர்தரத்தை அளித்துவருகிறோம்.  இத்தகைய உயரிய விருதைப் பெறும் இந்த தருணம், அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த நம் அனைவருக்கும் ஒரு பெருமைமிகு தருணம். அசோக் லேலண்ட்டின் வெற்றிகரமான பயணத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக டெமிங் விருதை வென்றிருப்பது, இத்துறையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தும், செயல்படுத்தும் எங்களது சாதனைகளுக்கு ஒரு மகுடமாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் குவாலிட்டி, சோர்சிங் அன்ட் சப்ளை செயின் பிரிவின் மூத்த துணைத் தலைவர் திரு.ஆர்.சிவநேசன் (Mr. R. Sivanesan, Senior Vice President – Quality, Sourcing and Supply Chain, Ashok Leyland) பேசுகையில், "பன்ட்நகர் உற்பத்தி தொழிற்சாலையைத் தொடர்ந்து, இப்போது அசோக் லேலண்ட்டின் ஓசூர் ப்ளாண்ட் -2ம்  ஜப்பான நாட்டைச் சேராத உலகின் வேறு எந்தவொரு கமர்ஷியல் வாகன உற்பத்தியாளர்களும் பெற்றிராத டிக்யூஎம்-க்கான மிகஉயர் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.  மேலும் இவ்விருது திறன்மிக்க மனிதவள மேலாண்மையின் உதவியுடன், வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை மற்றும் தரமிக்க செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது நாங்கள் எப்போதுமே கவனம் செலுத்தி வருவதற்கு கிடைத்திருக்கும் பலன். இந்த ப்ளான்ட் இருபது வ்ருடங்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அதிநவீன, மிக உயர் தொழில்நுட்பங்கள் கொண்டதாக உருப்பெற்றிருக்கிறது.  பெயிண்ட் ஷாப்கள் மற்றும் ப்ரஸ் ஷாப்கள் அடங்கிய ஃபினிஷிங் மற்றும் அசெம்பிளிங் பிரிவுகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இங்குள்ளன. ஓசூர் பளான்ட் பெற்றிருக்கும் இந்த கெளரவம், அங்கீகாரம் , டிக்யூஎம்-மில் நம்முடைய பயணத்தை மேலும் அதிக நம்பிக்கையுள்ளதாக்கி இருக்கிறது. இது நம்முடைய வெற்றிகளை  இன்னும் பல புதிய முயற்சிகளில் தொடரச் செய்யும்’’ என்றார்.

அசோக் லேலண்ட்டின் உற்பத்தி மற்றும் ப்ராஜெக்ட் ப்ளானிங் பிரிவின் மூத்த துணைத்தலைவர் திரு. ஹரிகர் (Mr. Harihar P., Senior Vice President – Manufacturing and Project Planning, Ashok Leyland) கூறுகையில்,’’அசோக் லேலண்ட் தனது இரு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் ‘டெமிங் விருதை’ வென்றிருப்பது, எங்களுக்கு மிக பெருமையளிக்கும் தருணமாகும். நாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அம்சத்திலும் உலகத்தரத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது, இவ்விருதைப் பெற உதவியிருக்கிறது. அதிக பலன்களை அளிக்கும் ஆற்றல் கொண்ட தரமான மேலாண் முறைகள், அவற்றை செயல்படுத்துவதில் தேர்ச்சிப்பெற்ற வடிவமைப்பு மற்றும் இவை அனைத்தையும் எப்ப