அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.

அதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்திற்கு, சன்னி வக்பு வாரியம் உரிமை கொண்டாட முடியாது. அவர்களுக்கு 5 ஏக்கர் நிலம், மத்திய அரசாலும், மாநில அரசாலும் மாற்று இடத்தில் வழங்கப்படலாம். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள சுமார் 67 ஏக்கர் பகுதியிலோ அல்லது அவர்கள் விரும்பக்கூடிய வேறு எந்தப் பகுதியிலோ மசூதி கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கு வழங்கப்படவேண்டும். அங்கேயே, ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும். ராமர் கோவில் கட்டும் பணிகளை மத்திய அரசு மேற்பார்வையிட வேண்டும். மூன்று மாதத்திற்குள் இது தொடர்பான ஒரு திட்டத்துடன் மத்திய அரசு தயாராக வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முழு விபரம் படிக்க  கிளிக் செய்யவும்.