சென்னை அப்பல்லோ - 8-வது ப்ராச்சியல்கான் 2019 கருத்தரங்கம்

சென்னை அப்பல்லோ - 8-வது ப்ராச்சியல்கான் 2019 கருத்தரங்கம்

சென்னை, 28th March 2019: அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமான அப்பலோ ஃபர்ஸ்ட்மெட் ஹாஸ்பிடல் [Apollo First Med Hospital], 8-வது ‘ப்ராச்சியல்கான் 2019’ [8th biennial meeting BRACHIALCON 2019]  கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த கருத்தரங்கம், மார்ச் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி மார்ச் 2019 வரை சென்னையில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் அமெரிக்காவின் மேயோ க்ளினிக்கின் கன்சல்டண்ட் மற்றும் க்ரூப் லீடர் டாக்டர். ஆலன் பிஷப் [Dr.Allen Bishop,Consultant and Group Leader ,Mayo Clinic, USA] மற்றும் அமெரிக்காவின் சின்சின்னாட்டியைச் சேர்ந்த க்ளினிக்கல் டைரக்டர் டாக்டர் ரோஜர் கார்ன்வால் [Dr.Roger Cornwall,Clinical Director, Cincinnati,Ohio, USA]  என மூளையதிர்ச்சி பின்னல் என தமிழில் அழைக்கப்படும் ப்ராச்சியல் ப்லெக்சஸ் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும், ப்ராச்சியல் ப்லெக்சஸ் அறுவைச்சிகிச்சையில் உண்டாகி இருக்கும் முன்னேற்றங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கின்றனர். இக்கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பங்கேற்கிறார்கள்.

அப்பல்லோ ஃப்ர்ஸ்ட்மெட் ஹாஸ்பிடல்ஸின்  ப்ளாஸ்டிக் சர்ஜரி துறையின் அனைத்து வகை மறுசீரமைப்பு ப்ளாஸ்டிக் அறுவைச்சிகிச்சைகளைச் சேர்ந்த குழு, குறிப்பாக கை அறுவைச்சிகிச்சை மற்றும் நுண் அறுவைச்சிகிச்சை பிரிவு ப்ராச்சியல் ப்லெக்சஸ்  தொடர்பான சிக்கல்களுக்கு மூளைக்கு வெளியே நரம்புகளில் மேற்கொள்ளப்படும்  பெரிபெரல் மைக்ரோசர்ஜிகல் நெர்வ் சர்ஜரிகளுக்கு [peripheral microsurgical nerve surgeries] புகழ் பெற்றது. நம்முடைய கழுத்து தண்டுவடம் பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நரம்புகள் ஆரம்பிக்கின்றன.  இவை ஒன்றுக்கு ஒன்று குறுக்காக கழுத்துப்பகுதியில் பரவியிருக்கும். இதன் தொடர்ச்சியாக கழுத்துப் பகுதியில் இருந்து கீழே கைகளுக்கும் செல்கிறது. இதையே ப்ராச்சியல் ப்லெக்சஸ் என்று அழைக்கிறோம். இந்த நரம்புகளில் உண்டாகும் காயம் பக்கவாதத்திற்கு காரணமாகிறது. நம்முடைய கையை முழுவதுமாகவோ அல்லது பாதி அளவோ பக்கவாத பாதிப்புக்கு உள்ளாக்கி விடும்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் மிக அதிகம் நடைபெறுகின்றன. இந்த விபத்துகளில் சிக்குபவர்களில் பலருக்கு உண்டாகும் ப்ராச்சியல் ப்லெக்சஸ்  காயங்களால், அவர்கள் நிரந்தரமாக முடங்கிப் போய்விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் இளைய தலைமுறையினர்.  கல்லூரி அல்லது பள்ளிக்குச் செல்பவர்கள் அல்லது தங்களது வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள். விபத்துகளினால் உண்டாகும் பக்கவாதம் பாதிப்பை தவிர, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக செயல்பட விடாமல் தடுக்கும் வகையில் தாங்கமுடியாத தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதோடு இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் மன அழுத்தம் மற்றும் மனரீதியான பிரச்னைகளாலும் அவதிப்படுகிறார்கள்.

ஒரு சாலை விபத்தில்,  ப்ராச்சியல் ப்லெக்சஸ்  காயங்களை கவனிக்காமலோ அல்லது தவறாகவோ பரிசோதிப்பது பெரும் பாதிப்புகளை காயமடைந்தவருக்கு உண்டாக்குகிறது. பெரும்பாலும் விபத்துகளில் காயம் அடைபவர்களுக்கு மூளை, தண்டுவடம் மற்றும் மார்பு பகுதிகளில் உண்டான காயங்களில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில், இவற்றில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ப்ராச்சியல் ப்லெக்சஸ்  காயங்கள் இருப்பின், அவர்கள் மறுசீரமைப்பு ப்ளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களிடம் கலந்து ஆலோசனை பெற்று, காயமடைந்த 2 முதல் 6 மாதங்களுக்குள் மைக்ரோசர்ஜிக்கல் நெர்வ் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன் சிகிச்சை அளிப்பது மிக மிக அவசியம். இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொள்வதால், விபத்தில் ப்ராச்சியல் ப்லெக்சஸ் காயமடைந்தவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் வலியின்றி சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

குழந்தை பிறக்கும் போது உண்டாகும் ப்ராச்சியல் ப்லெக்சஸ்  கோளாறுகள், அக்குழந்தையைப் பாதிக்கின்றன. ப்ராச்சியல் ப்லெக்ஸில் உண்டாகும் காயம் சில சமயங்களில் குழந்தைகளின் கையை தளர்ந்து போக செய்துவிடுகின்றன. இந்த பாதிப்பானது, காயமடைந்த நரம்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவை ஒவ்வோரு தண்டுவடத்தில்  எந்த கோணத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்து அமையும். நரம்புகள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பின் வலியின் தீவிரம் அதிகம் இருக்கும்.

இது குறித்து பேசிய அப்பல்லோ ஃபர்ஸ்ட்மெட் ஹாஸ்பிடல்ஸின் தலைவர் மற்றும் மூத்த ஆலோசகர் பேராசிரியர் ஆர். வெங்கடசுவாமி [Prof. R. Venkataswami, (Head and Senior Consultant), Apollo First Med Hospitals], ‘’ப்ராச்சியல் ப்லெக்சஸ்  காயங்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது. விபத்தில் காயமடைந்த 2 மாதம் முதல் 6 மாதம் வரையிலான கோல்டன் ப்ரீயட்டில் முறையான சிகிச்சைகளைப் பெறாவிட்டால், அடுத்து பெறுகிற மருத்துவ நடைமுறைகள் ஓரளவுக்கே முழுமையான தீர்வுகளைக் கொடுக்கும்’’. என்றார்.

பெரியவர்களைப் போல் இல்லாமல், ப்ராச்சியல் ப்லெக்சஸ் காயம் குழந்தைகளின் கையின் வளர்ச்சி மற்றும்  செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கிறது. இதனால் காயம் உண்டான பகுதி, அதன் எதிர்பகுதியை விட சிறியதாக இருக்கும்.

ப்ராச்சியல் ப்லெக்சஸ் அறுவைச்சிகிச்சை குறித்து அப்பல்லோ ஃபர்ஸ்ட்மெட் ஹாஸ்பிடல்ஸின் டாக்டர் வி. புருஷோத்தமன் [Dr. V. Purushothaman, (Senior Consultant Plastic Surgeon) Apollo First Med Hospitals],  “ப்ராச்சியல் ப்லெக்சஸ் அறுவைச்சிகிச்சை மற்ற அறுவைச்சிகிச்சைகளைப் போல் இல்லை. ’’ப்ராச்சியல் ப்லெக்சஸ் அறுவைச்சிகிச்சைக்கு பிறகு குணமடைவதற்கு அதிக காலம் பிடிக்கும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தசைகளை சாதாரண நிலைக்கு கொண்டு வந்து, அவற்றின் செயல்பாடுகளை வழக்கம் போல் மேற்கொள்ள, 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் முழு கைக்குமான முறையான பிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இது சாத்தியம். குழந்தைகளுக்கு உண்டாகும் ப்ராச்சியல் ப்லெக்சஸ் காயத்திற்கு 4 முதல் 6 மாதத்திற்குள்,  ஆரம்ப நிலையிலேயே அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளும் நல்ல தீர்வுகள் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் 200-க்கும் அதிகமான ப்ராச்சியல் ப்லெக்சஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து இருக்கிறோம் என்றார்.”

கடந்த சில ஆண்டுகளாக, ப்ராச்சியல் ப்லெக்சஸ் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.  குறிப்பாக, நரம்பு வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்  இதற்கு முக்கிய காரணமாகும். இன்று இதய பைபாஸ் அறுவைச்சிகிச்சையைப் போன்றே சிக்கலான நரம்புகளுக்கான பைபாஸ் அறுவைச்சிகிச்சைகளும் சாத்தியமாகி இருக்கின்றன. இதனால் ஓரளவுக்கு ப்ராச்சியல் ப்லெக்சஸ் காயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்ப முடியும். ப்ராச்சியல் ப்லெக்சஸ் காயம் முழுமையாக இருப்பின், அதற்கு அவசியமான மருத்துவ நடைமுறைகள் குறித்து தீவிரமாக கலந்தாலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கும் இந்த கருத்தரங்கம் ஒரு முக்கிய தளமாக அமையும். இதில் இத்துறையில் பெரும் அனுபவம் பெற்ற மருத்துவ நிபுணர்கள் தங்களது கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.