‘பிரிட்டானியா சாப்பிடு, உலகக் கோப்பைக்குச் சென்றிடு‘

‘பிரிட்டானியா சாப்பிடு, உலகக் கோப்பைக்குச் சென்றிடு‘

ஐகானிக் ‘பிரிட்டானியா சாப்பிடு, உலகக் கோப்பைக்குச் சென்றிடு ‘பிரச்சாரத்தை மீண்டும் கொண்டு வர ஐசிசி - பிரிட்டானியா கூட்டாண்மை ஒப்பந்தம்

 

* கிரிக்கெட் பிரபலங்கள் கபில் தேவ், க்ரிஸ் ஸ்ரீகாந்த், சையத் கிர்ம்சானி மற்றும் ரோஜர் பின்னி நிகழ்ச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கினர்

* 2019 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளை நேரடியாகக் காணும் அனுபவத்தைப் பெற 100+ ரசிகர்களை பிரிட்டானியா அனுப்பும்

* 2019 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியுடன் இணைந்து பிடித்தமான பிரச்சாரத்துடன் பிரிட்டானியாவின் 100 ஆண்டு கொண்டாட்டங்கள்

சென்னை: 2019 ஏப்ரல் : நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் தனது மறக்க முடியாத பிரச்சாரங்களுள் ஒன்றான ‘பிரிட்டானியா சாப்பிடு உலகக் கோப்பைக்குச் சென்றிடு’ மீண்டும் கொண்டு வந்துள்ளது. பழைய நினைவுகளைக் கிளறும் இப்பிரச்சாரம் இந்தியாவின் இரு முக்கிய அம்சங்களான உணவையும், கிரிக்கெட்டையும் இணைக்கும் வகையில்1999இல் அறிமுகமானது.  இந்த ஆண்டுக்கான மிகப் பெரிய நிகழ்ச்சிகளுள் ஒன்றாக ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி விளங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் இதன் மூலம் பிரிட்டானியா பிரச்சாரம் முன்பை விடப் பிரம்மாண்டமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டிகளை நேரடியாகக் காணும் சுகமான அனுபவத்தை 100 நபர்களுக்கு இலவசமாக வழங்கும். 
 

லட்சக் கணக்கான நபர்களுக்கு அனுபவங்களும், பரிசுகளும் பேக்கில் காணப்படும் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவோருக்குக் கிடைக்கும். இ-வவுச்சர்கள், கிரிக்கெட் பிரபலங்களிடமிருந்து கையெழுத்திட்ட நினைவுப் பரிசுகள், குலுக்கள் பரிசுகள் ஆகியவவை அடக்கம்.  

இது குறித்து பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தையியல் துணைத் தலைவர் அலி ஹாரிஸ் ஷேர் கூறுகையில் ‘ எங்கள் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு எங்கள் ஐகானிக் ‘பிரிட்டானியா சாப்பிடு உலகக் கோப்பைக்குச் சென்றிடு’ பிரச்சாரத்தை மிகப் பெரிய அளவில் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.  பிரிட்டானியாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.  1999இல் முதல் முறையாக அறிமுகமான போது அந்தக் காலத்தில் மிகவும் புதுமையாக இருந்தது. அப்போது நடைபெற்ற சந்தைப் பிரச்சாரத்தை மக்கள் மறக்காமல் இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு 100+ வாடிக்கையாளர்களுக்கு உலகக் கோப்பைப் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பை இலவசமாக வழங்குன் மூலம்  ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனின் கனவையும் நனவாக்குவோம்.  லட்சக் கணக்கான நபர்களுக்குப் பரிசுகளும், உலகக் கோப்பை நினைவுப் பரிசுகளும் அளிக்க இருக்கிறோம்’ என்றார்.

 

ஐசிசி பொது மேலாளர் (வர்த்தகம்) கேம்ப்பெல் ஜமீசன் பேசுகையில் ‘பிரிட்டானியா நிறுவனத்துடனான கூட்டாண்மையை வரவேற்கிறோம். ‘பிரிட்டானியா சாப்பிடு உலகக் கோப்பை சென்றிடு’ என்னும் பிரச்சாரம் குதூகலமானது.  இந்தியா முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பிராண்டான பிரிட்டானியா இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பைத் தனது ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.  2019 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் போது எங்கள் பிரச்சாரம் லட்சக் கணக்கான ரசிகர்களைச் சென்றடையும்.  விளையாட்டுகளுடன் பிரிட்டானியாவுக்கு எப்போதுமே வலுவான தொடர்புண்டு என்பதால் இந்தியா முழுவதும் கிரிக்கெட் ஜுரத்தை இன்னும் அதிகரிக்க எங்களுக்கு உதவும்’ என்றார்.

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டானிய நிறுவனம் 1983 இந்தியக் கிரிக்கெட் பிரபலங்களான கபில் தேவ், ரோஜர் பின்னி, சையத் கிர்மானி மற்றும் க்ரிஸ் ஸ்ரீகாந்து ஆகியோரைப் பிரச்சாரத்தைத் துவக்க அழைத்திருந்தது.  ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளத்திலும் 1983இன் மறக்க முடியாத பழைய நிகழ்வுகளின் சுகமான தருணங்களை நினைவூட்டிப் பகிர்ந்து கொண்டனர்.  அந்த மாபெரும் வெற்றி ஒவ்வொரு இந்திய ரசிகனின் ஆதரவால் சாத்தியப்பட்டது. 

ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் பிரச்சார காலத்தில் ‘பிரிட்டானியா சாப்பிடு உலகக் கோப்பை சென்றிடு’ என்னும் வாசகம் அடங்கிய பிரிட்டானிய பொருளை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதில் காணப்படும் எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பிரச்சாரத்தில் பங்கேற்கலாம். வாடிக்கையாளர் கணக்கு உருவாக்கப்பட்டவுடன் ஒவ்வொரு பேக்கிலும் உள்ள ‘ஒட்டங்கள்’ அதில் சேர்க்கப்படும். ஒவ்வொரு 100 ஓட்டத்துக்கும் வாடிக்கையாளருக்குக் கட்டாயப் பரிசு உண்டு. மேலும் விவரங்களுக்கும், விதிகளுக்கும் www.britanniacontest.com பார்க்கவும்.