பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள்

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள்
Bus strike additional special trains for pongal festival

சென்னை: பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள், இதை சமாளிப்பதற்காக ஆயிரக்கணக்கான அரசு சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்படும்.

இந்த ஆண்டும் 11,959 பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பஸ்கள் நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குவதாக இருந்தது.

தற்போது நடைபெறும் பஸ் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக முன்பதிவு ரத்து செய்யப்பட்டு விட்டது.

எனவே, மாற்று ஏற்பாடாக தமிழக அரசு கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வேயிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதை ஏற்று சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கியமான நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

Bus strike additional special trains for pongal festival