சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு: 90.95% பேர் தேர்ச்சி

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு: 90.95% பேர் தேர்ச்சி
CBSE 2017 10 results out 90 point 95 per cent students pass

புது டெல்லி: கடந்த மார்ச் 9-ந்தேதி முதல் ஏப்ரல் 10-ந்தேதி வரை நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாடுமுழுவதும் 19.8 லட்சம் மாணவ - மாணவிகள் இத்-தேர்வை எழுதி இருந்தனர். சென்னை மண்டலத்தில் 1.78 லட்சம் மாணவ- மாணவிகள் தேர்வை எழுதினர்.

இத்தேர்வில் நாடுமுழுவதும் 90.95% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 96.21 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் குறைந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 99.62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

CBSE 2017 10 results out 90 point 95  per cent students pass