தந்தையிடம் சிகிச்சைக்காக பணம் கேட்ட சிறுமி உயிரிழந்தார்

தந்தையிடம் சிகிச்சைக்காக பணம் கேட்ட சிறுமி உயிரிழந்தார்
Cancer patient Sai Sri dies of cancer

விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சாய் ஸ்ரீ (13), இவர் எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரின் நோயை குணப்படுத்த மருத்துவ சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது வீட்டை விற்று குழந்தை சாய் ஸ்ரீ-யின் சிகிச்சைக்கு பணம் தயார் செய்ய அவரது தாய் முடிவு செய்தார், ஆனால், மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து வாழும் சாயி ஸ்ரீயின் தந்தை வீட்டை விற்க சம்மதிக்கவில்லை.

இதனால், தன் உயிரை காப்பாற்ற வீட்டை விற்க சம்மதிக்குமாறு சிறுமி சாய் ஸ்ரீ, தன் தந்தையிடம் கெஞ்சியவாறு ஒரு வீடியோ பதிவினை அனுப்பிவைத்தார், ஆனால் அதன் பிறகும் அவர் தந்தை வீட்டை விற்க சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், புற்று நோயின் தாக்கம் அதிகமாகி சிறுமி சாய் ஸ்ரீ இரு தினங்களுக்கு முன்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PLEASE CLICK HERE: https://youtu.be/wpxTOC7C-aY

Cancer patient Sai Sri dies of cancer