திரைப்படத்துக்கு உதவிடும் "இஓஎஸ் சி700" கேமிரா

திரைப்படத்துக்கு உதவிடும் "இஓஎஸ் சி700" கேமிரா
Canon Hosts Cinema EOS C700 Camera

திரைப்படத்துக்கு உதவிடும் இஓஎஸ் சி700 கேமிராவை தமிழகத்தின் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் முன்னிலையில் வெளியிட்டது கேனான் இந்தியா நிறுவனம்

கேமிரா தொடர்பான சிறப்புக் காட்சியை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர்.

சென்னை: கேனான் நிறுவனமானது எல்.வி.பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாதெமி, எஸ்ஐசிஏ மற்றும் கோடெக்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சினிமா இஓஎஸ் சி700 டிஜிட்டல் தொழில்நுட்பக் கேமிரா தொடர்பாக சிறப்பான காட்சிப் பதிவை வெளியிட்டது.

இந்த பிரத்யேக படக்காட்சி நிகழ்வானது செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில், தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் அதிகளவில் பங்கேற்றனர். குறிப்பாக முன்னணி ஒளிப்பதிவாளர்களாக விளங்கக் கூடிய பி.சி.ஸ்ரீராம், ராஜீவ் மேனன், ரவி கே.சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, கேனான் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு கசுடடா கோபாயாஷி கூறியதாவது:-

தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைக் கண்டறிந்து அதனை வெளியிட வேண்டும் என்பதில் கேனான் உறுதிப்பாட்டுடன் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் மிகச்சிறப்பான இடத்தைப் பிடித்து நிழற்படம் சார்ந்த துறையில் முன்னிலை பெற்று விளங்குகிறது. சினிமா என்பது இந்திய கலாசராத்தின் ஒரு அங்கமாகவே விளங்குவதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, சினிமா துறையிலும் நாங்கள் கால் பதித்துள்ளோம். திரையில் நிபுணத்துவத்தை காண்பிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தித் தருவதுடன், எங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

இதுகுறித்து, கேனான் இந்தியாவின் நிழற்படப் பிரிவு தகவல் மையத்தின் துணைத் தலைவர் எட்டி உடகுவா கூறியதாவது:-

விரைவான புதுயுக கண்டுபிடிப்புகளே நிழற்பட உலகின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திட முடியும். அதன்படி தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி அவற்றை சந்தைக்குக் கொண்டு வந்து வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பிப்பத்தை எங்களது கடமையாகக் கொண்டிருக்கிறோம். புகைப்பட கேமிரா தொழில்நுட்பத்தில் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, இப்போது திரைப்படத் துறையிலும் கேமிராக்களை உருவாக்க முனைந்துள்ளோம். இப்போது இஓஎஸ் சி700 கேமிராவை அறிமுகப்படுத்தியதன் மூலம், திரைப்பட அனுபவத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம் என்றார்.

கேனான் இஓஎஸ் சி700 கேமிரா ஆனது 4.5கே திறன் உடையது. மேலும், 4 கே அம்சத்தில் 120 எப்பிஎஸ் திறனும், 2கே அம்சத்தில் 24 எப்பிஎஸ் திறனும் உள்ளன. 14 மற்றும் 15 ஸ்டாப்களைக் கொண்டு இரண்டு விதமான மாடல்களுடன் கேமிரா வடிவமைக்கப்பட்டுள்ளது.

Canon Hosts Cinema EOS C700 Camera