தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்

தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீர்
Cauvery Management Authority order 31 TMC water to Tamil Nadu

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நதிநீர் பங்கீடு தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவுகளின் படி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை என தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். டெல்டா சாகுபடி விவரம், குடிநீர் தேவை என அனைத்து அம்சங்களும் முன்வைக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் ஜூலை மாத பங்காக தமிழகத்துக்கு 31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Cauvery Management Authority order 31 TMC water to Tamil Nadu