சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடம் முழுவதும் இடிந்து விழும் அ

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டிடம் முழுவதும் இடிந்து விழும் அ
Chennai Silks fire Building alleges to be collapsed

சென்னை: சென்னை தியாகராய நகர், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள "தி சென்னை சில்க்ஸ்" 7 மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கட்டிடத்தில் இருந்த பணியாளர்களை பத்திரமாக மீட்டனர்.

தொடர்ந்து பற்றி எரிந்த தீயை 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீர் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கட்டிடத்தின் 7 மாடிகளில் 2-வது மாடி வரை இடிந்து விழுந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் தியாகராய நகர் முழுவதும் கரும்புகை பரவி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Chennai Silks fire Building alleges to be collapsed