சென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை அயனாவரத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
Class VII girl raped by criminals for 7 months in Chennai

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 வீடுகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசிக்கும் 11 வயதான சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அவர் மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமி சகஜமாக பேசுவாராம்.

இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

முதலில் 4 கொடூரர்களின இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் மேலும் 5 காவலாளிகளின் காமப்பசிக்கு இரையாக்கப்பட்டு இருக்கிறாள். அக்குடியிருப்பின் மொட்டை மாடி பகுதியிலும், ‘லிப்ட்’டுக்குள் வைத்தும் இந்த காம கொடூரர்கள் அந்த சிறுமியை தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள். அத்தோடு விடாமல் அக்குடியிருப்புக்கு பல்வேறு வேலைகளுக்காக வந்த பிளம்பர்கள், எலெக்ட்ரீசியன்கள் என்று மொத்தம் 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இந்த விஷயம் அரசல்புரசலாக அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. சிறுமியிடம் அவர்கள் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் குறித்து தெரிவித்தார். அந்த சிறுமி கூறிய முதல் தகவலில், ஒரு காவலாளியின் பெயரையும், ‘லிப்ட்’ இயக்கும் ஊழியர்கள் இருவரின் பெயரையும் மட்டுமே தெரிவித்தார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

உடனடியாக அந்த 3 காம கொடூரன்களையும் அயனாவரம் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை விசாரித்தபோது தான், மொத்தம் 16 பேர் அந்த சிறுமியை சீரழித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து 13 பேரையும் அயனாவரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பிடிபட்ட 16 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் மீது ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Class VII girl raped by criminals for 7 months in Chennai