கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

பூந்தமல்லி: சென்னை அமைந்தகரை, சதாசிவம் மேத்தா தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் சவுமியா(19), இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சவுமியா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீவிர சிகிச்சையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுமியா, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சவுமியா, ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று பூங்காவில் தனது காதலருடன் நின்று அவர் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை சவுமியாவின் தங்கை பார்த்துவிட்டு, தந்தையிடம் கூறப்போவதாக தெரிவித்தார்.

இதனால் பயந்துபோன சவுமியா, வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர், மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.