போக்குவரத்துத் துறையில் கடன்: விஜயகாந்த் கேள்வி

நடிகரும், தே.மு,தி.க தலைவருமான விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது " தனியார் நிறுவனங்களில் நான்கு, ஐந்து பேருந்துகள் வைத்து நடத்தும் தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள், பேருந்து கட்டணம் மூலம் லாபம் பெறுகின்றனர்.
ஆனால் தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்துத் துறைக்கு ஏன் சுமார் 18 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்துத் துறையில் உள்ள ரூ.18 ஆயிரம் கோடி கடனை அடைக்க உடனே செயல்திட்டம் தீட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.