நடிகர் ராதா ரவிக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்

 நடிகர் ராதா ரவிக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: "கொலையுதிர் காலம்" திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதா ரவி, நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதன் காரணமாக ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், ராதாரவியின் கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் இது குறித்து கூறுகையில், “பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.