கருணாநிதியின் 94வது பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாட்டம்

கருணாநிதியின் 94வது பிறந்தநாள்: கேக் வெட்டி கொண்டாட்டம்
DMK leader Karunanidhi celebrate his birthday by cutting cakes

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவர் வசிக்கும் கோபாலபுரம் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது.

முன்னதாக மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் கருணாநிதியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி பெற்றனர். திமுக, பல்வேறு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

இந்தநிலையில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா அவரது இல்லமான கோபாலபுரத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, அப்போது கருணாநிதியின் மனைவி தயாளம்மாள், மகன் ஸ்டாலின் உள்ளிட்ட உறவினர்கள் உடன் இருந்தனர்.

DMK leader Karunanidhi celebrate his birthday by cutting cakes