தினம் தினம் தங்கம் (நேரலையில்)

தினம் தினம் தங்கம் (நேரலையில்)
Dhinam Dhinam Thangam in Vaanavil Television

(திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை)

உங்கள் வானவில் தொலைக்காட்சியில் புதிய பரிமாணத்தில், நேரடி ஒளிபரப்பாக, திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை உற்சாகமான வினாடி வினா போட்டியில் தங்கத்தை தினம் தினம் வெகுமதியாய் அள்ளித்தரும் மாபெரும் நிகழ்ச்சி தினம் தினம் தங்கம்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெரும் அனைவருக்கும் பொதுஅறிவு கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் இரண்டு சுற்றுகள் உள்ளன. முதல் சுற்றில் ஒரு கேள்வியுடன் நான்கு விடைகள் கொடுக்கப்படும். அதிலிருந்து சரியான விடையை முப்பது வினாடிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

முதல் சுற்றில் பதில் அளிப்பவர்கள் மட்டுமே இரண்டாம் சுற்றுக்கு செல்ல முடியும், இரண்டாம் சுற்றிலும் ஒரு கேள்வியுடன் நான்கு விடைகள் கொடுக்கப்படும் அதிலும் 30 வினாடிக்குள் பதில் சொல்பவற்கே அவரது திறமையின் சான்றாக தங்கம் வெகுமதி ஆக்கப்படும். சிறியவர்கள் , இல்லத்தரசிகள், முதியவர்கள் என்று வயது வரம்புகளின்றி போட்டி போட்டு விளையாடும் சுவாரஸ்ய நிகழ்ச்சி உங்கள் தினம் தினம் தங்கம். இது மாலை நேரக் கொண்டாட்டம். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் கரோலின்.

Dhinam Dhinam Thangam in Vaanavil Television